தேசியம்
செய்திகள்

Mark Carney அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தும் கனடியர்கள்?

பிரதமரின் பெரும்பான்மை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சில கனடியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பாமல் இருக்க சில கனடியர்கள் முடிவு செய்கின்றனர்.

வேறு சிலர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடிதத்தை மீண்டும் திருப்பி அனுப்ப ,முடிவு செய்துள்ளனர்.

பிரதமர் Mark Carney அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையின் ஒரு வடிவமாக இந்த நகர்வுகளை கனடியர்கள் முன்னெடுக்கின்றனர்.

கடந்த மாதம் Liberal கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க உதவிய தொடர்ச்சியான கட்சித் தாவல்களுக்கும் எதிரான ஒரு எதிர்ப்பின் வடிவமாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நகர்வு போராட்டம் நடத்துவதற்கான ஒரு தவறான வழிமுறை என Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Mark Gerretsen கூறினார்.

இது முற்றிலும் தவறான தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் ஒரு போராட்ட முறை என அவர் தெரிவித்தார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பாமல் விடும் முடிவு, அரசாங்கத்தை பாதிப்பதில்லை என கூறிய Mark Gerretsen, அது வாக்காளர்களின் சொந்த சமூகத்தை பாதிக்கிறது என தெரிவித்தார்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை செவ்வாய்க்கிழமைக்குள் (12) பூர்த்தி செய்யுமாறு கனடியர்கள் கோரப்பட்டனர்.

ஆனாலும் இது ஒரு உறுதியான காலக்கெடு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதை பூர்த்திசெயாதவர்களுக்கு கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பும்.

தொடர்ந்து இந்த கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளதை உறுதி செய்வதற்கு தொடர் தொலைபேசி அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகள் மேற்கொள்ளப்படலாம்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவது சட்டப்படி கட்டாயமானதாகும்.

அவ்வாறு செய்ய மறுப்பவர்களுக்கு $500 அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

2021-ல் நடந்த இறுதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை 98 சதவிகிதமான கனடியர்கள் பூர்த்தி செய்திருந்தார் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

Related posts

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்

Lankathas Pathmanathan

கனடாவின் பயண கட்டுப்பாடுகள் மாற்றமடைந்தன!

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment