கனடிய வணிகத் தலைவர்களை பிரதமர் Mark Carney சந்தித்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல வணிகத் தலைவர்களை பிரதமர் சந்தித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியது.
கனடா-அமெரிக்க வர்த்தகப் போர் குறித்து இந்த சந்திப்பில் பிரதானமாக விவாதிக்கப்பட்டது.
தவிரவும் கனடாவில் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்னுரிமைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
தங்கள் சார்ந்த துறைகளைச் சேர்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்பட்டனர் எனவும் இந்த சந்திப்பு குறித்த பிரதமர் அலுவலக ஊடக அறிக்கை குறிப்பிட்டது.
RBC, Enbridge, Bell Canada, Bombardier, CN Rail, Suncor, Nutrien உள்ளிட்ட இருபத்து மூன்று நிறுவனங்கள் இந்த சந்திப்பின் பங்கேற்பாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
