September 26, 2026
தேசியம்
செய்திகள்

Patrick Brown முன்னெடுத்த $1,700 நிதி சேர் நிகழ்வு

மத்திய Conservative தலைமை போட்டியில் ஏற்பட்ட கடனை செலுத்தும் நிதி சேர் நடவடிக்கைகளை Brampton நகர முதல்வர் Patrick Brown முன்னெடுத்து வருகின்றார்.

முன்னாள் தலைமை வேட்பாளருக்கு அவரது பிரச்சாரத்திலிருந்து செலுத்த வேண்டிய கடன் தொகை உள்ளதாக தெரியவருகிறது.

இதனை செலுத்தும் முயற்சியாக Patrick Brown கடந்த வாரம் Toronto பெரும்பாகத்தில் நிதி திரட்டும் நிகழ்வொன்றை நடத்தினார்.

இதற்கு ஒரு நுழைவு சீட்டிக்கு $1,700 வசூலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தலைமைப் பிரச்சாரத்தில் இருந்து Patrick Brownனை வெளியேற்றியதன் மூலம் பலரை Conservative கட்சி ஆச்சரியப்படுத்தியது.

அவர் தலைமை போட்டியின் விதிகள், கனடிய தேர்தல்கள் சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த Patrick Brown, தலைமைப் பிரச்சாரத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், Brampton நகர முதல்வராக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றார்.

Related posts

Donald Trump மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு கனடிய பிரதமர் கண்டனம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் குறைவாக தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

சர்வதேச மாணவர்கள் வருகையை மேலும் குறைக்க முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment