தேசியம்
செய்திகள்

Carbon வரி உயர்வை எதிர்க்கும் முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

அடுத்த மாதம் அமுலுக்கு வரும் Carbon வரி உயர்வை இடைநிறுத்துமாறு மற்றொரு மாகாண முதல்வர் Justin Trudeau அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Carbon வரி உயர்வை இடைநிறுத்த மாகாண முதல்வர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey இந்த கோரிக்கையை பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்  முன்வைத்துள்ளார்.

இதன் மூலம் Carbon வரி உயர்வை எதிர்க்கும்  முதல்வர்கள் பட்டியலில் Andrew Furey புதிதாக இணைந்துள்ளார்.

Ontario மாகாண முதல்வரும் Progressive Conservative கட்சியின் தலைவருமான Doug Ford ஏற்கனவே Carbon வரி உயர்வை எதிர்க்கும் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

Saskatchewan முதல்வர் Scott Moe இந்த வரி உயர்வை எதிர்த்துள்ளார்.

Related posts

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

Leave a Comment