தேசியம்
செய்திகள்

2024 இன் அதிக வெப்பமான நாள்?

கனடாவின் சில பகுதிகளில் 2024 இல் இதுவரை அதிக வெப்பமான நாளாக புதன்கிழமை (13) அமையவுள்ளது.

Toronto உட்பட Ontarioவின் சில பகுதிகலில் 18 அல்லது 19 C வரை வெப்பநிலை உணரப்படும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

கடந்த வாரம் Torontoவில் வெப்பநிலை 16.6 C ஐக் கடந்தது.

16.6 C ஐக் கடந்தால், 2024 இன் வெப்பமான நாளாக புதன்கிழமை மாறும் சாத்தியக் கூறு தோன்றியுள்ளது.

இதேபோன்ற வெப்பநிலை Ontario தெற்கிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Windsor நகரில் வெப்பநிலை 19 C வரை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.

ஆனால் தலைநகர் Ottawaவில் வெப்பநிலை 9 C ஆக மட்டுமே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவின் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகள் உறைபனி தூறலை எதிர்பார்க்கின்றன.

Winnipeg உட்பட Manitobaவின் பிற பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றுவதற்கு தயாராகும் கனடிய அரசு!

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாண முதல்வரிடன் மன்னிப்பு கோரிய பிரதமர் அலுவலகம்

Lankathas Pathmanathan

கனேடிய மேலவை உறுப்பினர்கள் மீது ரஷ்யா தடை உத்தரவு

Leave a Comment