September 12, 2026
தேசியம்
செய்திகள்

Markham Thornhill தொகுதியின் வேட்பாளராக தமிழர்!

கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட Conservative கட்சியின் சார்பில் தமிழர் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் Conservative கட்சி சார்பாக Markham Thornhill தொகுதியில் லியோனல் லோகநாதன் போட்டியிடவுள்ளார்.
கடந்த வார விடுமுறையில் நடைபெற்ற Markham Thornhill தொகுதியின் Conservative கட்சியின் வேட்பாளர் நியமனத் தேர்தலில் லியோனல் லோகநாதன் வெற்றி  பெற்றார்.
Markham-Thornhill தொகுதியை அமைச்சர் Mary Ng, 2019ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.
கடந்த பொதுத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் Melissa Felian இந்த தொகுதியில் போட்டியிட்டார்.
தமிழ்-கனடியர்கள் இந்த தொகுதியில் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் Conservative கட்சியின் சார்பில் மூவர் வேட்பாளராகும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவர்களில் ஒருவர் வேட்பாளராக தெரிவாகியுள்ள நிலையில் இருவர் வேட்பாளர் நியமனத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது.
இவர்களுக்கான நியமனத் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

CUSMA ஒப்பந்தம் செயலிழந்தால், கனடா இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம்?

Lankathas Pathmanathan

ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரில் Markham நகரில் உள்ள ஒரு தெரு

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment