தேசியம்
செய்திகள்

கனடாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபடவில்லை: அமெரிக்க கருவூல செயலாளர்

கனடாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபடவில்லை என அமெரிக்க கருவூல செயலாளர் Scott Bessent தெரிவித்தார்.

பிரதமர் Mark Carney, அதிபர் ஜனாதிபதி Donald Trump-பின் வரிகளை ஒரு அரசியல் சண்டையாக மாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

கனடியர்களுக்கு எது சிறந்ததோ அதை செய்யாமல், Liberal கட்சிக்கும் தனக்கும் எது சிறந்ததோ அதை Mark Carney செய்கிறார் என Scott Bessent கூறினார்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தனது தேர்தல் ஆதரவு நிலவரத்திற்கு சிறந்தது என்ற காரணத்தினால் Mark Carney அதை தொடர்வதாக Scott Bessent மேலும் கூறினார்.

கனடா அமெரிக்காவுக்கு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலையும் அவர் இந்த செவ்வியில் ஏளனம் செய்தார்.

Related posts

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதல் முதற்குடியின முதல்வர் விரைவில்?

Lankathas Pathmanathan

இலங்கை வரலாற்றில் கறுப்பு July ஒரு துயரமான அத்தியாயமாகவே உள்ளது: பிரதமர் Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment