தேசியம்
செய்திகள்

அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த தமிழர் குற்ற ஒப்புதல்

அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தமிழரான Toronto நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கனடாவில் இதே போன்ற குற்றங்களுக்காக முன்னர் தண்டனை பெற்ற Toronto நபர் ஒருவர், சமூக ஊடகங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

40 வயதான ரமணன் பத்மநாதன் என்பவர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார் என வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவிடம் தற்காலிகமாக சரணடைந்த பின்னர், December 3, 2025 அன்று ரமணன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு Toronto காவல்துறையினரால் கனடாவில் கைது செய்யப்படும் வரை, ஏழு ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம், அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட இலக்கு வைக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது என அமெரிக்க நீதித்துறையின் குற்றவியல் பிரிவின் A. Tysen Duva கூறினார்.

அந்த நேரத்தில், Toronto காவல்துறை அவர் மீது 93 குற்றங்களை சுமத்தியிருந்தது.

அமெரிக்க நீதித்துறையின் கூற்றுப்படி, 2022-ஆம் ஆண்டில் அந்தக் குற்றங்களுக்காக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்,

அவருக்கு கனடிய நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் இருந்தனர் எனவும் அவர்கள் 11 முதல் 17 வயதுடையவர்கள் எனவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அவர் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார்.

குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் கட்டாய சிறைத்தண்டனையுடன், அமெரிக்காவில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு அபராதம், மேற்பார்வையிடப்பட்ட விடுதலை காலத்தையும் அவர் எதிர்கொள்கிறார்.

அவருக்கு May 27 அன்று அமெரிக்காவில் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

LJI Reporter ரம்யா சேது

 

Related posts

இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமரின் கருத்து இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்: இலங்கை அரசாங்கம்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பிரதமருக்கு 2021 முதல் ஐந்து முறை விளக்கம்

Lankathas Pathmanathan

COVID தடுப்பூசிகளுக்கு புதிய பெயர்கள்: அங்கீகரித்தது Health கனடா!

Gaya Raja

Leave a Comment