Toronto கிழக்குப் பகுதியில் GO புகையிரதம் மோதியதில் 18 வயது இளைஞர் உயிரிழந்தார்.
Toronto நகரின் கிழக்குப் பகுதியில் புகையிரதம் மோதியதில் 18 வயது இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் புகையிரதத்தில் மோதிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட நபர் ஒரு பெண்ணுடன் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, வெவ்வேறு திசைகளிலிருந்து இரண்டு புகையிரதங்கள் வந்ததாக காவல்துறையினர் கூறினர்.
ஒரு புகையிரதத்தில் இருந்து தப்பிக்க அந்த நபர் தண்டவாளத்தை தாண்டி குதித்த போது, அவர் இரண்டாவது புகையிரதத்தால் மோதப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவருடன் இருந்த பெண்ணுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் கூறினர்.
இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்ததாகக் கருதுவதாகவும், ஆனால் விசாரணையில் ஏதேனும் குற்றச் செயல் இருப்பது தெரியவந்தால் அது குறித்த மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.
