தேசியம்
செய்திகள்

June மாத இறுதிக்குள் கனடா 44 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்: கனேடிய அரசாங்கம்

கனடாவுக்கான தனது COVID தடுப்பூசி விநியோகத்தை Pfizer அதிகரித்துள்ளது.கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டது. June மாதம் மேலதிகமாக  5 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்ப Pfizer முடிவு செய்துள்ளது. இதன் மூலம் June மாதம் மாத்திரம் மொத்தம் 9 மில்லியன் தடுப்பூசிகளை Pfizer கனடாவுக்கு அனுப்பவுள்ளது.

இது Moderna, AstraZeneca தடுப்பூசிகளை விட மேலதிகமான எண்ணிக்கை என பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.இந்த வாரம் கனடா 3.3 மில்லியன்  தடுப்பூசிகளை பெறவுள்ளது. இது இதுவரை காலத்திலும் கனடா ஒரே நேரத்தில் பெறும் அதிக அளவிலான தடுப்பூசிகளாகும்.

இந்த நிலையில் June மாத இறுதிக்குள் கனடா மொத்தம் 44 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் என கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது   அதேவேளை Johnson & Johnson தடுப்பூசிகளின் விநியோகம் April மாத இறுதியில் ஆரம்பிக்கும் என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Related posts

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாக பதிவானது

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!