Toronto-வில் வசித்து வரும் முன்னாள் ஈரானிய அதிகாரி, பயங்கரவாத நிதியுதவிக்கு ‘முக்கியப் பங்காற்றினார்’ என CBSA குற்றம் சாட்டுகிறது.
முன்னாள் ஈரானிய அதிகாரியான Abbas Omidi, மத்திய கிழக்கு பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிக்க தேவையான வருவாயை இஸ்லாமியக் குடியரசு ஈட்டுவதற்கு உதவுவதில் ஒரு “முக்கியமான” பங்கு வகித்திருந்தார் என குற்றம் சாட்டப்படுகிறது.
ஈரானின் அமைச்சகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய அவர், பயங்கரவாதத்திற்கு அந்நாட்டு அரசு அளித்த ஆதரவுக்கு உதவினார் என குற்றம் சாட்டப்படுகிறது.
கனடிய எல்லைச் சேவைகள் முகமையகம் – CBSA – செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டு வெளியானது.
ஈரானிய ஆட்சியின் மூத்த உறுப்பினராக இருந்ததற்காக Abbas Omidi கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் நடவடிக்கையை எதிர்கொள்கிறார்.
Abbas Omidi கனடாவிலிருந்து ஏன் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் 2024-ஆம் ஆண்டு அறிக்கை, அவர் உயர் பதவியில் பணியாற்றிய ஈரானிய சுரங்கத் துறைக்கும், அந்நாட்டு இராணுவம், இஸ்லாமிய புரட்சி காவலர் படைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
