தேசியம்
செய்திகள்

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Fiona சூறாவளியின் இரண்டு நாட்களுக்குப் பின்னரும் பெரும்பாலான Prince Edward தீவின் குடியிருப்பாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொள்கின்றனர்.

புயல் தீவிரம் அடைந்ததில் இருந்து பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் திங்கள் (26) காலை மின்சாரத்தை பெற்ற 4,500 வாடிக்கையாளர்களும் அடங்குகின்றனர்.

இருப்பினும், முக்கியமான பகுதிகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மீண்டும் மின் இணைப்பை வழங்கும் பணியில் 89 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதன் (28) இந்த எண்ணிக்கை 107 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக வெளியான கணக்கின்படி, Prince Edward தீவில் சுமார் 75 ஆயிரம் வீடுகளும் வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாமல் உள்ளன.

Atlantic கனடா முழுவதும் 200,000 பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை செவ்வாய் மாலை வரை தொடர்ந்தது.

Related posts

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

Lankathas Pathmanathan

31 ஆண்டுகளில் மிக அதிகமாக பதிவாகியுள்ள வருடாந்த பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan

Leave a Comment