கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணம் மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிற்கான கனடியர்களின் பயணம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்துள்ளது.
கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், எல்லை தாண்டிய பயணம் மீண்டும் அதிகரித்துள்ளது.
கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய தரவுகள் இதை காட்டுகின்றன.
June மாதத்தில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லை தாண்டிய பயணம் இரு திசைகளிலும் அதிகரித்தது.
புதிய தரவுகளின்படி, கனடியர்கள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட 23 இலட்சம் பயணங்களில் இருந்து திரும்பியுள்ளனர்.
இது ஓராண்டுக்கு முந்தைய நிலையை விட ஐந்து சதவீதம் அதிகமாகும்.
தொடர்ந்து 15 மாதங்களாக சரிவு காணப்பட்ட நிலையில், இது மூன்று மாத கால மீட்சியை நீட்டித்தது.
இதற்கிடையில், அமெரிக்க வாசிகள் கனடாவுக்கு 30 லட்சம் பயணங்களை மேற்கொண்டனர்.
இது முந்தைய ஆண்டை விட 6.1 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் இது தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடிக்கும் வளர்ச்சிப் போக்கை தக்கவைத்துள்ளது.
