Ontario மாகாணத்திற்கு சுகாதாரப் பணியாளர்களையும் விரைவு COVID சோதனை கருவிகளையும் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Ontario மாகாணத்தில் COVID தொற்றின் மூன்றாவது அலையின் மத்தியில் தொற்றுகளின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு தனது சொந்த வளங்களைத் திரட்டுவதாகவும், தொற்றால் குறைந்த பாதிப்புக்குள்ளான மாகாணங்களுடன் ஒருங்கிணைந்து Ontarioவிற்கு உதவிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Intergovernmental விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார். இராணுவ விமானங்களை பயன்படுத்துவது உட்பட பிற மாகாணங்களிலிருந்து உதவிற்கு அனுப்பப்படும் சுகாதாரப் பணியாளர்கள் இடமாற்றம் செய்வதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஒருங்கிணைத்து ஈடுசெய்யும் எனவும் அமைச்சர் LeBlanc கூறினார்.
சில Atlantic மாகாணங்கள் அடுத்த சில நாட்களில் ள் அனுப்பக்கூடிய பணியாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் போன்ற துறைகளிலிருந்து பணியமர்த்தப்பட கூடிய ஊழியர்களின் பட்டியலையும் மத்திய அரசு தயாரித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
Ontario ஏனைய மாகாணங்களையும் பிரதேசங்களையும் உதவி கோரிய நிலையில் ஒரு தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செய்தார். கனேடிய செஞ்சிலுவை சங்கம் மூலம் உதவிகள் வழங்க பிரதமர் Justin Trudeau முன்வைத்த கோரிக்கையை Ontario மாகாண அரசாங்கம் வெள்ளிக்கிழமை நிராகரித்திருந்தது. ஆனாலும் மத்திய அரசு துறைகளால் பணியமர்த்தப்பட்ட சுகாதார ஊழியர்கள் Ontarioவிற்கும், குறிப்பாக Toronto பெரும் பகுதிக்கும் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு அறிக்கையில் பிரதமர் Trudeau கூறினார்.