தேசியம்
செய்திகள்

புதிதாக பதிவாகும் பாதிக்கும் மேலானவை தொற்றின் மாறுபாடுகள்: புதிய modelling தரவுகளின் தகவல்

COVID தொற்றின் மாறுபாடுகள் புதிதாக பதிவாகும் தொற்றுக்களில் பாதிக்கும் மேலானவை என வெள்ளிக்கிழமை வெளியான modelling தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் தலைமை பொது சுகாதார அலுவலர் வைத்தியர் Theresa Tam, துணை தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Howard Njoo  ஆகியோர் கனடாவின் புதிய modelling விபரங்களை வெளியிட்டனர். மூன்றாவது அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தொடர்ந்தும்  கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் தேவைப்படும் என இந்த modelling விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்னரே கணித்தபடி, கனடா COVID தொற்றுகளின் வலுவான எழுச்சியை தற்போது  காண்கிறது என்பதையும் இன்றைய modelling விபரங்கள் கூறுகின்றன. கடந்த ஏழு நாட்களில் சராசரியாக, கனடா நாளாந்தம் 8,400க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை பதிவு செய்து வருகிறது.

Related posts

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Scarborough வீதி விபத்தில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan

இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் தோல்வி!

Gaya Raja

Leave a Comment