தேசியம்
செய்திகள்

30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம்: NACI பரிந்துரை

30 வயதுக்கும் மேற்பட்ட கனேடியர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்படலாம் என தேசிய தடுப்பூசி குழு தெரிவித்துள்ளது.

NACI என அழைக்கப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு, AstraZeneca தடுப்பூசியைப் பெற கூடியவர்களுக்கு பரிந்துரைக்கும் தகுதி வயதை குறைத்துள்ளது. ஆனாலும் இதற்கான இறுதி தீர்மானத்தை எடுக்கும் முடிவு  மாகாணங்களிடமும் பிரதேசங்களிடமும்  உள்ளது என NACI கூறியுள்ளது.

இதுவரை கனடா முழுவதும் 2.3 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் மாத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளன. பல்வேறு உலகளாவிய காரணிகளால், அடுத்த தொகுதி எதிர்கால ஏற்றுமதி எப்போது கனடாவை வந்தடையும் என்பது குறித்து  நிச்சயமற்ற நிலை உள்ளது.

Related posts

கனடாவில் அனைத்தும் செயலிழந்து விட்டது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர்களின் பங்களிப்பை அங்கீகரித்துக் கொண்டாடும் காலம் இது: பொங்கல் செய்தியில் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja

Leave a Comment