September 11, 2024
தேசியம்
செய்திகள்

Quebec வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் பலி – ஐவர் காயம்

Halloween தினத்தன்று Quebec மாகாணத்தில் நிகழ்ந்த வாள் வெட்டுத் தாக்குதலில் இருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். Quebec மாகாணத்தின் Quebec நகரில் சனிக்கிழமை (31) இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

தாக்குதல் குற்றவாளி கைது

இந்தத் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டில் 24 வயதான Carl Girouard என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். Montreal நகருக்கு வடக்கே Sainte-Thérèse என்ற புறநகரைச் சேர்ந்த இவர் மீது இரண்டு முதல் நிலை கொலை குற்றச் சாட்டுக்களும் ஐந்து கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் மெய்நிகர் வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்

தாக்குதல் குற்றவாளியான 24 வயதான Carl Girouard கைது செய்யப்பட்டபோது (STEVE JOLICOEUR, COLLABORATION SPÉCIALE)

சந்தேக நபருக்கு பயங்கரவாத குழுக்களுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என Quebec நகர காவல் துறையின் தலைவர் Robert Pigeon தெரிவித்தார். அவரது இந்தத் தாக்குதல் தனிப்பட்ட நோக்கம் காரணமானது என காவல்துறையினர் நம்புகின்றனர். இவர் முடிந்தவரை பலருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டவராக இருந்தார் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக கூறும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் எழுந்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட இருவரும் Quebec நகரத்தில் வசிக்கும் 56 வயதான François Duchesne, 61 வயதான Suzanne Clermont என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த ஐவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனக் கூறும் அதிகாரிகள் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை

தாக்குதலில் கொல்லப்பட்ட56 வயதான François Duchesne, 61 வயதான Suzanne Clermont …..

இந்தத் தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் Justin Trudeau வெளியிட்ட இரங்கல்

Quebec முதல்வர் François Legault வெளியிட்ட இரங்கல்

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் François-Philippe Champagne வெளியிட்ட இரங்கல்

கனடிய துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland வெளியிட்ட இரங்கல்

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் Erin O’Toole வெளியிட்ட இரங்கல்

புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh வெளியிட்ட இரங்கல்

Bloc Québécois கட்சித் தலைவர்Yves-François Blanchet வெளியிட்ட இரங்கல்

பசுமை கட்சித் தலைவர் Annamie Paul வெளியிட்ட இரங்கல்

Ontario மாகாண முதல்வர் Doug Ford வெளியிட்ட இரங்கல்

 

Related posts

புதிய Liberal-NDP ஒப்பந்தத்தின் முதல் சோதனை வரவு செலவுத் திட்டம்: NDP தலைவர் Singh

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

Lankathas Pathmanathan

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

Leave a Comment