கனடாவில் COVID தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையுடன் 10 இலட்சத்தை தாண்டியுள்ளது.
Ontarioவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றுக்கள் பதிவாகின. கனடாவில் ஞாயிற்றுக்கிழமை 7,600 புதிய தொற்றுக்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகின. இதன் மூலம் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 21 ஆயிரத்து 498 ஆக பதிவானது.
23 ஆயிரத்து 623 மரணங்களும் தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டன. 10 இலட்சத்து 9 ஆயிரத்து 950 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.