தேசியம்
செய்திகள்

முன்னாள் ஆளுநர் நாயகத்தை நியாயப்படும் பிரதமர்

முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston மீதான Conservative கட்சியின் கடுமையான விமர்சனங்கள் குறித்து பிரதமர் அதிருப்தி வெளியிட்டார்.

கனடிய பொது தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளராக முன்னாள் ஆளுநர் நாயகம் David Johnston அறிவிக்கப்பட்டார்.

இந்த நியமனம் குறித்து இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

David Johnstonனுடனான தனது தனிப்பட்ட உறவை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அரசியல் இலாபம் பெற முயல்வதாக Conservative கட்சியின் மீது Justin Trudeau குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் தேர்தல் குறுக்கீடு குற்றச்சாட்டுகள் குறித்து பொது விசாரணை நடத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை (17) Conservative கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதே கோரிக்கையை Bloc Quebecois, NDP கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

Related posts

இலங்கை குறித்த கனடிய அரசின் பயண ஆலோசனை!

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

கனடாவை வந்தடைந்த 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!