தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கு COVID உறுதி

Toronto நகர முதல்வர் John Toryக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (14) நகர முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் இதனை உறுதி செய்தது.

“இப்போது, ​​நான் நன்றாக உணர்கிறேன்” எனவும் “இதுவரை மிகவும் இலேசான அறிகுறிகளைக் கொண்டிருக்கிறேன்” எனவும் Tory அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர்ப்பதற்காக தனிமைப்படுத்துவதற்கான சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை Tory பின்பற்றுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

நகர முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் எண்ணிக்கை காரணமாக, கடந்த பல வாரங்களாக Tory தினசரி விரைவு COVID சோதனைகளை எடுத்து வருகிறார் என அவரது அலுவலகம் தெரிவிக்கின்றது.

புதன்கிழமை (13) காலை, சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது.

கடந்த சில நாட்களாக Tory பல நிகழ்வுகளின் கலந்து கொண்டார்.

இதில் மத்திய அமைச்சர் Ahmed Hussen, Ontario முதல்வர் Doug Ford ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வுகளும் அடங்குகின்றன.

Tory நகர முதல்வராக தனது வேலையைத் தொடர்ந்து செய்வார் எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலத்தில் மெய்நிகர் கூட்டங்களில் பங்கேற்பார் எனவும் அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஏற்கனவே மூன்று தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ள Tory, அடுத்த மாதம் நான்காவது தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்.

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு அனைவரையும் மீண்டும் ஊக்குவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவதாக Tory கூறினார்.

Related posts

Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

குடியிருப்புப் பாடசாலைகளின் கொடூரங்களுக்கு கத்தோலிக்க தேவாலயத்தின் ஒரு முக்கிய கனேடியப் பிரிவு மன்னிப்பு கோரியது!

Gaya Raja

மீண்டும் அதிகரிக்கு இனத்தை மையமாகக் கொண்ட வெறுப்புக் குற்றங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment