February 16, 2025
தேசியம்
செய்திகள்

RCMP இடைக்கால ஆணையராக Mike Duheme நியமனம்

RCMP இன் இடைக்கால ஆணையராக Mike Duheme பதவி வகிக்க உள்ளார்.

மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (17) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

சனிக்கிழமை (18) முதல் Mike Duheme இடைக்கால ஆணையராக பொறுப்பேற்பார் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino அறிவித்தார்.

RCMP ஆணையர் Brenda Lucki தனது பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவரது பதவிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படும் வரை இடைக்கால ஆணையராக Mike Duheme பதவி வகிக்க உள்ளார்.

RCMP இன் அடுத்த ஆணையராக முதற்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என முதற்குடி சமூகத்தின் தலைவர்கள் சிலர் பிரதமரிடம் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு தலையீடு விசாரணை தீர்மானம் நிறைவேறியது

Lankathas Pathmanathan

வாகனத் திருட்டு குறித்து 28 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு புலம்பெயர் குழுக்கள் அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment