தேசியம்
செய்திகள்

Montréal கத்திக் குத்தில் மூவர் பலி – சந்தேக நபர் கைது!

Québec மாகாணத்தின் Montréal நகரில் நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

Montreal கிழக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக வெள்ளிக்கிழமை (17) காலை மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக Montreal காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் 19 வயதான Arthur Galarneau என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் Arthur Galarneau

பலியானவர்களும் கைது செய்யப்பட்டவரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் குறித்து Montreal நகர முதல்வர் Valerie Plante கவலை தெரிவித்தார்.

Related posts

மக்கள் கட்சியின் தலைவர் கைது

Gaya Raja

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ள பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!