தேசியம்
செய்திகள்

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்ற ஊகத்தை நிராகரித்த Vancouver நகர முதல்வர்

சீனாவின் தலையீட்டால் தேர்தலில் வெற்றி பெற்றதான ஊகங்களை Vancouver நகர முதல்வர் நிராகரித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நகரசபை தேர்தலில், Vancouver நகர முதல்வராக Ken Sim தெரிவானார்.

இந்த தேர்தலில் சீனாவின் Vancouver துணைத் தூதரகம் தலையிட்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாக கனடாவின் உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியானது.

இதனை ஊகத்தின் அடிப்படையிலான செய்தி என Vancouver நகர முதல்வர் Ken Sim கண்டித்தார்.

எங்கள் தேர்தலில் வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால், ஒரு கனடியராக அது குறித்து அறிய விரும்புவதாக அவர் கூறினார்.

Vancouverறில் உள்ள சீனாவின் புதிய தூதரகத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் Ken Sim தெரிவித்தார்.

இந்த நிலையில் Vancouver தேர்தலில் சீனாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் CSIS அறிக்கை குறித்து மேலும் விவரங்களை அறிய விரும்புவதாக British Colombia மாகாண முதல்வர் David Eby தெரிவித்தார்.

Related posts

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan

இலைதுளிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கள் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment