Quebec மாகாணத்தில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 68 வயதான விமானி பலியானார்.
நினைவேந்தல் நாள் சிறப்பு வான்வழி மரியாதை நிகழ்வில் பங்கேற்ற சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.
இந்த விமானம் தீப்பிடித்ததில், அதை இயக்கிய 68 வயது விமானி Daniel Parent சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அனுபவமிக்க விமானியான இவர், தனியார் விமானம் ஒன்றில் தனியாகப் பயணித்து இந்த ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, மொத்தம் ஆறு சிறிய ரக விமானங்கள் வானில் “Missing Man formation” எனப்படும் சிறப்பு மரியாதை அணி வகுப்பை நிகழ்த்தின.
அதனைத் தொடர்ந்து விமானத்தை தரையிறக்குவதற்காக விமான நிலையத்தை நோக்கி தாழ்வாகப் பறந்து சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் மரங்களுக்குப் பின்னால் விழுந்து நொறுங்கியது.
குறிப்பிட்ட விமானம் தரையில் மோதிய வேகத்தில் வெடித்து தீப்பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புப் படையினர் 6 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும், விமானம் முழுமையாகத் தீயில் எரிந்து கொண்டிருந்ததால் விமானியை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Beauce பிராந்தியத்தின் Saint-Georges விமான நிலையத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தத் துயர சம்பவம் குறித்து Quebec மாகாண முதல்வர் Paul St-Pierre Plamondon உள்ளிட்ட தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
