Toronto கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு தமிழரான அனு ஸ்ரீஸ்கந்தராஜா மீண்டும் போட்டியிடுகிறார்.
புதிதாக அமைக்கப்பட்ட Toronto கல்விச் சபையின் 12-ஆவது வட்டார உறுப்பினர் பதவிக்கு அனு ஸ்ரீஸ்கந்தராஜா போட்டியிடுகிறார்.
Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.
கல்விச் சபை உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் Ontario மாகாணத்தில் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.
இதில் Toronto கல்விச் சபையின் 12-ஆவது வட்டார உறுப்பினர் பதவிக்கு அனு ஸ்ரீஸ்கந்தராஜா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது வேட்புமனுவை திங்கட்கிழமை (17) தாக்கல் செய்துள்ளார்
Scarborough-Rouge Park பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Toronto கல்விச் சபையின் அறங்காவலராக இறுதியாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா பதவி வகித்தார்.
அவர் கல்விச் சபையின் அறங்காவலராக முதன்முதலில் 2018-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த September மாதம் நடைபெற்ற இடைத் தேர்தலில் Scarborough Rouge-Park தொகுதியில் நகரசபை தேர்த்லில் அனு ஸ்ரீஸ்கந்தராஜா போட்டியிட்டிருந்தார்.
இதுவரை இந்தத் தொகுதியில் போட்டியிட மொத்தம் ஏழு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Toronto கல்விச் சபை Ontario மாகாணத்தின் மேற்பார்வைக்கு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இம்முறை Toronto கல்விச் சபையின் 12-ஆவது வட்டார தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைகிறது.
கல்விச் சபை உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் Ontario மாகாணத்தில் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களிப்பு காலம் October 6 முதல் October 11 வரையாகும்.
