September 30, 2026
தேசியம்
செய்திகள்

மாகாணத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட பாடசாலைச் சபைகளில், அறங்காவலர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை குறைவு?

Ontario மாகாணத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட சில பாடசாலை சபைகளில், அறங்காவலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

மாகாண மேற்பார்வையின் கீழ் உள்ள சில பாடசாலை வாரியங்களில் நடைபெறும் நகரசபைத் தேர்தலில் அறங்காவலர் வேட்பாளர்கள் பட்டியல், கடந்த காலத்தை விட சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நிர்வாகக் குறைபாடுகளைக் காரணமாகக் கொண்டு, Ontario மாகாண கல்வி அமைச்சர் Paul Calandra எட்டுப் பாடசாலை வாரியங்களின் கட்டுப்பாட்டை மாகாண அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

இந்தச் சபைகளில் தாங்கள் செய்ய இயலாத ஒரு பணிக்காக போட்டியிடும் நிலையை வருங்காலப் போட்டியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் நிலையில் வேட்பாளர் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பல கல்வி சபைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக கல்வி அமைச்சரின் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

ஆனால் அது எப்போது முடிவடையும் என்பதற்கான காலக்கெடுவை Paul Calandra குறிப்பிடவில்லை.

கல்வி சபைகளின் நிர்வாகம் சீரான நிலையை அடையும் போது அவை அறங்காவலர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்பதை மட்டுமே அவர் வலியுறுத்தியுள்ளார்.

Ontario மாகாணத்தில் நடைபெற உள்ள நகர சபைத் தேர்தல்கள், Toronto பொது, கத்தோலிக்கப் பாடசாலை கல்வி வாரியங்கள், Ottawa-Carleton மாவட்ட பாடசாலை கல்வி வாரியம், Dufferin-Peel கத்தோலிக்கப் பாடசாலை கல்வி வாரியம், Thames Valley மாவட்ட பாடசாலை கல்வி வாரியம், Near North மாவட்ட பாடசாலை கல்வி வாரியம், York மாவட்ட பாடசாலை கல்வி வாரியம் ஆகியவற்றின் காலவரையறையற்ற மேற்பார்வைக் காலத்தின் இடையிலேயே நடைபெறவுள்ளன.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், மாகாணம் முழுவதும் அறங்காவலர்கள் பங்கைக் கணிசமாகக் குறைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த May மாதம் அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.

வேட்பாளர் மனு தாக்கல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைகிறது.

கல்விச் சபை உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் Ontario மாகாணத்தில் October 26-ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் முன்கூட்டிய வாக்களிப்பு காலம் October 6 முதல் October 11 வரையாகும்.

Related posts

சுகாதார கட்டமைப்பு அழுத்தங்களை எளிதாக்க நடவடிக்கை எடுக்க முடியும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்!

Gaya Raja

ஹைட்டியை விட்டு வெளியேற கனடிய அரசின் மேலதிக விமான சேவைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment