September 30, 2026
தேசியம்
செய்திகள்

புதிய விதிகளின் கீழ் 6,100-க்கும் மேற்பட்டோருக்கு கனடிய குடியுரிமைக்கான சான்று வழங்கப்பட்டுள்ளது

புதிய விதிகளின் கீழ் 6,100-க்கும் மேற்பட்டோருக்கு கனடிய குடியுரிமைக்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் கனடா குடியுரிமைக்கான தகுதியை விரிவுபடுத்தியதிலிருந்து, புதிய விதிகளின் கீழ் 6,100க்கும் மேற்பட்டோர் குடியுரிமைக்கான சான்றுகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவில் பிறந்தவர்கள் எனத் தெரியவருகிறது.

கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறையின் (IRCC) தரவுகளின்படி, May 31 நிலவரப்படி, விரிவுபடுத்தப்பட்ட தகுதி அளவுகோல்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்களிலும், அமெரிக்காவில் பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் 51 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

கனடாவின் குடியுரிமை சட்டம், சட்டமூலம் C-3 மூலம் திருத்தப்பட்டது.

இத்திருத்தம் 2025 December 15 அன்று நடைமுறைக்கு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகளுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும்: Donald Trump

Lankathas Pathmanathan

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment