தேசியம்
செய்திகள்

பயன்படுத்தப்படாத Johnson & Johnson தடுப்பூசிகள் மீண்டும் அனுப்பப்படுகின்றன!

கனடாவில் பயன்படுத்தப்படாத Johnson & Johnson COVID தடுப்பூசிகள் மீண்டும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கனடாவின் தலைமை  பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam  இந்த தகவலை வெளியிட்டார். தரக் கட்டுப்பாடு காரணமாக 300,000 Johnson & Johnson தடுப்பூசிகளை உபயோகத்திற்கு அனுமதிப்பதில்லை என Health கனடா கடந்த வெள்ளிக்கிழமை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட தடுப்பூசிகளை மீண்டும் Johnson & Johnson நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் கனடா மேலும் 300,000 Johnson & Johnson தடுப்பூசிகளை  பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும்  தகுதியுள்ள கனடியர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்குவதற்கு இந்த விநியோகம் தேவைப்படுமா என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja

COVID கட்டுப்பாடுகளை விலத்தும் Alberta

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 31 ஆயிரம் வேலைகளை இழந்துள்ளது

Leave a Comment

error: Alert: Content is protected !!