COVID தடுப்பூசிகளுக்கு இடையிலான இடைவெளியை 49 நாட்களில் இருந்து 28 நாட்களாகக் குறைக்க British Colombia மாகாணம் முடிவு செய்துள்ளது.
மாகாணத்தின் சுகாதார தலைமை மருத்துவர் வைத்தியர் Bonnie Henry இன்று இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதற்கான அழைப்பு வரும் நாட்களில் சுமார் 170,000 பேருக்கு அனுப்பப்படும் என அவர் கூறினார்.
Hot spot தொற்றின் பரவலை அதிகம் எதிர்கொள்ளும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விரைவில் இரண்டாவது தடுப்பூசியை பெறுமாறு வைத்தியர் Henry கேட்டுக்கொண்டார்.
பரவலை அதிகம் எதிர்கொள்ளும் பகுதியில் வசிக்காதவர்கள் குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையே காத்திருக்க பரிந்துரைக்கப்படுகின்றது.