தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க கனடாவுக்கு எந்த திட்டமும் இல்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
செய்வாய்கிழமை Conservative கட்சி இதே அறிவிப்புடன் ஒரு அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த அறிவித்தலை Liberal கட்சியின் தலைவர் வெளியிட்டார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது கனடா அவர்களை அரசாங்கமாக அங்கீகரிக்கவில்லை என்பதை தேர்தல் பிரச்சாரத்தின் மூன்றாம் நாளான செய்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய Trudeau நினைவூட்டினார்.
தலிபான்கள் கனேடிய சட்டத்தின் கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பு என குறிப்பிட்ட Trudeau, அவர்கள் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை ஆயுத முனையில் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தார்
இதேவேளை கனேடிய அரசாங்கத்தின் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் திட்டத்தின் அடிப்படையில் திங்கள் மாலை, ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்த கனேடியர்கள் பலர் நாடு திரும்பினர்.
கனேடிய குடிமக்களையும் ஆப்கானியர்களையும் கனடாவுக்கு அழைத்து வந்த ஐந்தாவது விமானம் இதுவாகும்.