தேசியம்
செய்திகள்

அமெரிக்கா – ஈரான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்கும் கனடா

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கனடா வரவேற்கிறது.

கனடிய பிரதமர் Mark Carney இந்த கருத்தை தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிபர் ஜனாதிபதி Donald Trump, மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் இன்றியமையாத பங்காற்றிய பாகிஸ்தான், கத்தார், பிராந்திய கூட்டாளிகளுக்கு கனடா நன்றி தெரிவித்துள்ளது.

ஒரு நீடித்த யுத்த நிறுத்தம், Hormuz நீரிணை வழியாகப் பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதில் கனடா தெளிவாக உள்ளது என Mark Carney கூறினார்.

யுத்த நிறுத்தம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தால் பரவலாக உள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கனடிய பிரதமர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், அனைத்துத் தரப்பினரும் நல்லெண்ணத்துடன் உரையாடலைப் பேணுமாறும், பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்குமாறும் கனடா  கேட்டுக் கொண்டுள்ளது.

கனடா தனது கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், லெபனான் உட்பட இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையையும் நீடித்த அமைதியையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது என கனடிய பிரதமர் தெரிவித்தார்.

Related posts

Conservative கட்சியின் ,மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley இராஜினாமா!

Gaya Raja

New Brunswick முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களை விட Ontarioவில் வேறு விதிகளை எதிர்கொள்வார்கள்

Gaya Raja

Leave a Comment