மூத்த Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும்வரை தனது பதவியை இராஜினாமா செய்வதாக Finley கூறினார். அடுத்த பொது தேர்தலில் போட்டியிட போவதில்லை என கடந்த கோடையில் Finley அறிவித்திருந்தார்.
2004ஆம் ஆண்டு முதல் Haldimand-Norfolk தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய Finley முன்னாள் பிரதமர் Stephen Harperரின் அரசாங்கத்தில் பல அமைச்சரவை பதவிகளை வகித்தவராவார்