COVID தொற்றின் புதிய திரிபின் அதிகரிப்பை தடுக்க கடுமையான மூன்று வார பூட்டுதல் தேவை என Ontario அறிவியல் அட்டவணை கூறுகின்றது.
இந்த புதிய திரிபின் அதிகரிப்பை மழுங்கடிக்க மாகாணத்தின் சில பிராந்தியங்களில் மூன்று வார பூட்டுதல் அவசியம் என அறிவியல் ஆலோசனை அட்டவணை கூறு கின்றது. தற்போதைய நிலை தொடர்ந்தால், Ontarioவில் ஒரு சில வாரங்களில் நாளாந் தம் 2,500 முதல் 5,000 புதிய தொற்றுக்கள் பதிவாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
இன்று Ontarioவில் 1500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகிய நிலையில் இந்த கருத்தை அறிவியல் ஆலோசனை அட்டவணை வெளியிட்டது. February மாத ஆரம் பத்தின் பின்னர் இன்று Ontarioவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவாகின. குறிப்பாக Toronto முதல் Niagara Falls வரை தொற்றுக்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இது சுகாதார வல்லுநர்கள் மத்தியில் எச்சரிக்கை நிலையை தூண்டியுள்ளது.