தேசியம்
செய்திகள்

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Quebecகில் அமுலில் உள்ள  ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மாகாண முதல்வர் Francois Legault இந்த அறிவித்தலை வெளியிட்டார்.Quebecகின் சிவப்பு மண்டலங்களில் வாழும் மக்கள் இந்தத்  தளர்வுகளினால் பயனடைவார்கள் எனத் தெரியவருகின்றது.

மாகாணத்தின் பெரும்பகுதியில் எச்சரிக்கை நிலை Orange நிறமாகக் குறைக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவு இரவு 9:30 மணிக்கு அமுல்படுத் தப்பட்டது.Montrealலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் தொடர்ந்தும்  சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணிக்கு அமுல் படுத்தப்படுகின்றது.

ஆனாலும் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை முதல்வர் அறிவித்தார். இதன் மூலம் சிவப்பு மண்டலங்களில் புதன்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு இரவு 9:30க்கு மாற்றப்படவுள்ளது.

Related posts

Toronto-St. Paul இடைத் தேர்தலில் Conservative வெற்றி

Lankathas Pathmanathan

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja

வீட்டு விற்பனையும் வீட்டின் சராசரி விலைகளும் March மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment