தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வாரத்தில் அதிகம் பேசப்படும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக மாற்றமடைந்துள்ளது.

இந்த விடயம் குறித்து பிரதான இரண்டு கட்சிகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டுள்ளன.

உள்நாட்டு பயணத்திற்கான கட்டாய தடுப்பூசி கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை என Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த தொற்றை கடந்து செல்வதற்கான வழி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவது என கூறி மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடும் Trudeau, மருத்துவ காரணங்கள் இல்லாமல், தடுப்பூசி போடாதவர்கள் விமானங்களிலும் புகையிரதங்களிலும் பயணிக்க முடியாது என தெளிவுபடுத்தினார்.

கனடாவில் நான்காவது அலை தடுப்பூசி போடாதவர்களை பெரிதும் பாதித்துவரும் நிலையில் Trudeauவின் இந்தக் கருத்து வெளியானது.

ஆனாலும் கட்டாய தடுப்பூசிக்கு எதிரான தனது நிலைப்பாட்டை Conservative தலைவர் Erin O’Toole மீண்டும் முன்வைத்தார்.

தொற்றுக்கான விரைவு சோதனைகளும் முகமூடி கொள்கைகளும் கட்டாய தடுப்பூசிக்கு நியாயமான மாற்றீடுகள் என அவர் பரிந்துரைத்தார்.

Related posts

ஆயிரக் கணக்கணக்காவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தமிழர்

Lankathas Pathmanathan

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை Ontario-வில்

Lankathas Pathmanathan

Leave a Comment