தேசியம்
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

நீண்டகாலமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான  நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்தது.

828 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களுக்கான Michael Spavor, Michael Kovrig ஆகியோரின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளன. இவர்களின் முன்னாள் தொழிலதிபர் Michael Spavor எதிர்வரும் 19ஆம் திகதியும், முன்னாள் தூதர் Michael Kovrig எதிர்வரும் 22ஆம் திகதியும் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். இந்தத் தகவலை கனேடிய வெளிவிவகார அமைச்சர் Marc Garneau ஒரு அறிக்கையில் இன்று உறுதிப்படுத்தினார்

இவர்கள் இருவருக்குமான தூதரக அணுகலை கனடா தொடர்ந்தும் நாடுவதாகவும் அமைச்சர் Garneau  தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அதேவேளை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு கனடா கோரியுள்ளதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. 

Related posts

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Gaya Raja

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

Gaya Raja

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment