தேசியம்
செய்திகள்

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த தேசிய பொது விசாரணைக்கு இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்த விசாரணையை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி முதலில் கோரியிருந்தது.

இந்த விடையத்தில் தனது கட்சி ஒரு சுயாதீனமான, பொது விசாரணையை எப்போதும் ஆதரிக்கும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.

இந்த நிலையில் புதிய ஜனநாயகக் கட்சி புதன்கிழமை (01) இந்த விசாரணையை வலியுறுத்துகின்றது.

இந்த விசாரணையை கோரும் Conservative பிரேரணைக்கு NDP ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த சுயாதீனமான மதிப்பீடு குறித்து Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கம் தொடர் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் மேலும் கல்லறைகள்?

இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தை தீர்க்கமாக செயல்பட CTC வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment