தேசியம்
செய்திகள்

கனடா தின கொண்டாட்டங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை

கனடா தின கொண்டாட்டங்களின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட எத்தனிப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை Ottawa நகர முதல்வர் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களின் போது எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் Ottawa நகரம் பொறுத்துக் கொள்ளாது என நகர முதல்வர் Jim Watson எச்சரித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை அல்லது இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

Ottawa கனடா தினத்தில் முன்னெடுக்கப்படகூடிய எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராவதாகவும் Watson கூறினார்.

கனடா தினம் எங்கள் நாட்டைக் கொண்டாடுவதற்கான நேரம் என கூறிய அவர், சட்டத்தை யார் மீறினாலும், பின் விளைவுகள் ஏற்படும் எனவும் Watson தெரிவித்தார்.

“Freedom movement” பேரணிகள் கனடா தின வார இறுதி உட்பட கோடை முழுவதும் Ottawaவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து சூழல்களுக்குத் தயாராகும் ஒரு விரிவான பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறையினர் தயாராக்கியுள்ளதாக Ottawa காவல்துறையின் இடைக்கால தலைவர் Steve Bell கூறினார்.

அதேவேளை Ottawa காவல்துறையினர் RCMP, OPP ஆகியோரிடம் பாதுகாப்பு உதவிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 25, 2022 (புதன் )

Lankathas Pathmanathan

கிழக்கு Ottawaவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்துடன் குற்றவியல் தொடர்பு உள்ளது

Lankathas Pathmanathan

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment