September 28, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது?

கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை May மாதத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், May மாதத்தில் கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பும் கனடியர்களின் எண்ணிக்கை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

வியாழக்கிழமை (11) வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதல் கட்ட தரவுகள் இதை காட்டுகின்றன.

இது, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட எண்ணிக்கை அதிகரிப்பைக் குறிக்கிறது.

May மாதத்தில் 19 லட்சம் கனடியக் குடிமக்கள், கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று திரும்பி உள்ளனர்.

வாகனங்கள் மூலமான இருவழிப் பயணங்கள் 15.1 சதவீதம் அதிகரித்ததே இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

இருப்பினும், May 2025 முதல் விமானம் மூலமான இருவழிப் பயணங்கள் 5.5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டது.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், 2025-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கனடிய குடியிருப்பாளர்களிடையே பயணப் போக்குகள் மாறியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் முன்னதாகக் கூறியுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியான புள்ளிவிபரத் திணைக்கள தரவுகளின்படி, December 2025-ல் கனடிய குடியிருப்பாளர்கள் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட இருவழி பயணங்களில் 25 சதவிகித சரிவு காணப்பட்டது.

Related posts

கனடிய பொருட்களுக்கு வரிவிலக்கு ஒப்பந்தத்தைப் பெற Conservative தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

அதிகரித்தது Liberal எண்ணிக்கை – கட்சி மாறினார் Conservative உறுப்பினர்!

Lankathas Pathmanathan

British Colombiaவின் சில பகுதிகளில் மீண்டும் முக கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

Gaya Raja

Leave a Comment