September 11, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கனேடிய வேலை வாய்ப்புக்களும் வணிக நிறுவனங்களும், ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள் உறுதியாகவும், ஆக்கத் திறனுடனும் இருப்பதில் தங்கியிருப்பதால், இந்தச் சவாலை அனைவரும் எவ்வாறு கடக்கிறார்களென்பது முக்கியமானது. உலகெங்கும் கோவிட்-19 காரணமாக இது வரை 344,000 உயிர்கள் இழக்கப்பட்டு, 5.3 மில்லினுக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாண்டில் உலக பொருளாதாரம் பாரிய அளவு சுருங்கி 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வேலை இழப்பதுடன், 30 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்.

கோவிட்-19 உலகத் தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நெருக்கடிக்கான உறுதியான தீர்வுகளைக் கண்டு பிடிப்பதற்காக மே 28 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குரெறெஸ் (AntónioGuterres) ஜமெய்க்காவின் பிரதம மந்திரி அன்றூ ஹோல் நெஸ் (Andrew Holness) ஆகியோருடன் கனடா உயர் மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துமெனப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். விடுபட்டவர்கள் யாரெனக் கண்டுபிடித்து அவர்களைத் தூக்கிவிடுவதற்கான சர்வதேச பொறி முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. கோவிட்-19 இற்கு எதிரான போராட்டத்தில் உலகை ஒருங்கிணைப்பதற்குக் கனடா அதன் பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கிறது.

ஒன்றாரியோவில் உள்ள நீண்ட கால பராமரிப்பு நிலையங்கள் குறித்துக் கனேடிய ஆயுதப் படையினர் சமர்ப்பித்த அறிக்கை குறித்தும் பிரதம மந்திரி இன்று கருத்து வெளியிட்டார். நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் அவதானிக்கப்பட்ட மிகுந்த மனக் கவலையை ஏற்படுத்தும் விடயங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஒன்றாரியோ மாகாண அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால பரமரிப்பு நிலையங்களில் உள்ள முதியவர்களுக்கான பராமரிப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றாரியோ மாகாண அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கச் சமஷ்டி அரசு உறுதியளித்துள்ளது.

கனேடியர்களையும், முன் வரிசைப் பணியாளர்களையும் பாதுகாப்பதற்காக அரசு கடந்த பத்து வாரங்களில் 40 விமானங்களில் தனி நபர் பாதுகாப்புக் கருவிகளைப் பெற்றுக் கொண்டது. இதேவேளை, உள்ளுர் உற்பத்தியிலும் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 மில்லியன் சுவாசக் கவசங்களைத் தயாரிப்பதற்கு General Motors நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளுமெனப் பிரதம மந்திரி இன்று அறிவித்தார். இத்தகைய முதலீடுகள் மக்களைப் பாதுகாத்து, கோவிட்-19 இன் பரவல் வேகத்தைக் குறைப்பதற்கு உதவியாக இருப்பதுடன், சவால்களை எதிர்கொள்ளும் மோட்டார்க் கார்த் தொழிற் துறையின் ஓஷவா பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலைவாய்ப்புக்களையும் வழங்கவுள்ளன. இதைப் போன்று கோவிட்-19 இற்கான புதியவையும், மேம்பட்டவையுமான பரிசோதனைக் கருவிகளையும், ஏனைய பொருட்களையும் தயாரிப்பதற்குக் கனடா முழுவதிலும் உள்ள நிறுவனங்களுக்கும் ஆய்வு கூடங்களுக்கும் அரசு உதவியளிக்கிறது. நோபல் பரிசு பெற்ற கனேடியரான கலாநிதி Art McDonald மற்றும் அவரது குழுவினர் ஆகியோருக்கும் Vexosஇற்கும் இடையிலான கூட்டு முயற்சி மூலம் 10,000 சுவாச உதவிக் கருவிகளைத் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் கோடை காலத்தில் அவற்றின் விநியோகம் ஆரம்பமாவதுடன் கனடாவில் தயாரிக்கப்படும் சுவாச உதவிக் கருவிகளின் மொத்த எண்ணிக்கை 40,000 ஆக அதிகரிக்கும்.

700 வரையான இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நிதி ஒதுக்கீடு மூலம் விவசாயத்துறைக்கு ஆதரவளிக்கும் திட்டத்தையும் பிரதம மந்திரி அறிவித்தார். பயிர்ச் செய்கைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கனேடியர்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் முன்னொரு போதும் இல்லாத அளவு கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், கோவிட்-19 காரணமாக வேலையாட்களைப் பெற்றுக் கொள்வதில் அவர்களில் பலர் சிரமத்தை எதிர் கொள்கிறார்கள். இன்று அறிவிக்கப்பட்ட நிதியுதவி, எமக்கு உணவை உற்பத்தி செய்வோருக்கு ஆதரவளிப்பதுடன், இளையோருக்குப் புதிய வாய்ப்புக்களையும் வழங்கும்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on May 26th

Canadian jobs and businesses depend on stable and productive economies in other countries – so it matters to how everyone weathers this storm. Globally, COVID-19 has so far claimed more than 344,000 lives, with more than 5.3 million confirmed cases. It will cause the global economy to sharply contract this year, throwing more than 300 million people out of work and pushing more than 30 million people into extreme poverty.

Prime Minister Justin Trudeau, today announced that Canada will be convening a high-level meeting with UN Secretary-General AntónioGuterres and Prime Minister Andrew Holness of Jamaica, on 28 May, to advance concrete solutions to the development emergency caused by the COVID-19 pandemic.There is a need to create an international system that recognizes who is left behind and strives to lift them up. Canada is ready to do its part, to help bring the world together in the fight against COVID-19.

The Prime Minister today also addressed the report on Long-term facilities in Ontario that was presented by the Canadian Armed Forces. The report has brought to light extremely troubling observations in several long-term care facilities. This report has been shared with the Province of Ontario, and the federal government has committed to support Ontario as the province takes action on improving care for seniors in long-term centres.

To better protect Canadians and front line workers, the government has over the last 10 weeks, acquired over 40 flight loads of Personal Protective Equipment (PPE). At the same time, investment in domestic production has also increased. Today the Prime Minister announcedthat the government will sign a contract with General Motors to produce 10 million face masks.

Investments like this, will not only secure equipment to keep people safe and help slow the spread of COVID-19, but also provide autoworkers in Oshawa, with good, well-paying jobs in an industry that’s faced tough times.

Similarly the government is also supporting companies and research centres across Canada to develop new, improved COVID-19 test kits and products. A new contract has been signed for 10,000 ventilators to be produced through a partnership between Canadian Nobel Laureate Dr. Art McDonald, his team, and Vexos. Deliveries will begin this summer, bringing the total of made-in-Canada ventilators to 40,000.

The Prime Minister also announced support for the farming sector through a new funding for up to 700 youth jobs. With the growing season underway, farmers are working harder than ever to keep Canadians fed. But because of COVID-19, many are having trouble finding workers. The funding announced today will support the people who put food on our plates, while creating new opportunities for young people.

Related posts

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

கனடாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகரிக்கும் COVID தொற்று !

Gaya Raja

Leave a Comment