Markham நகரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சிறுவர்களை பாலியல் ரீதியாக மிரட்டுவதற்காக இணையத்தில் பதின்ம வயது சிறுவன் போல் நடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
24 வயதான சுகின் மோகனதாஸ் மீது குழந்தை பாலியல் குற்றங்கள் புதன்கிழமை (10) சுமத்தப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் சிறுவனாக நடித்து, ஆபாசப் படங்களைப் பெறுவதன் மூலம் சிறார்களை ஆசை காட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
December 2025-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையில், சந்தேக நபர் Snapchat, Instagram உள்ளிட்ட பல சமூக ஊடக கணக்குகளை இயக்கி வந்தது கண்டறியப்பட்டதாக Peel பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர் தனது இணைய உரையாடல்களின் போது “Keshawn” என்ற புனைப் பெயரைப் பயன்படுத்தினார் எனவும் காவல்துறை தெரிவித்தது.
இவர் புகைப்படங்களைப் பெற்ற பின்னர், அவற்றை பாலியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புவதால், தாங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பும் எவரையும் முன்வருமாறு அவர்கள் ஊக்குவிக்கின்றனர்.
இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
