தேசியம்
செய்திகள்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதி

இருதய நோய் காரணமாக Conservative நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Québec நாடாளுமன்ற உறுப்பினர் Bernard Généreux மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதய நோய் காரணமாக புதன்கிழமை (10) காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்துள்ளார்.

புதன் காலை நடைபெற்ற Quebec Conservative கட்சிக் குழு கூட்டத்திற்கு அவசர உதவி வாகனம் வரவழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் Pierre Poilievre தெரிவித்தார்.

64 வயதான Bernard Généreux உயிர் ஆபத்தற்ற நிலையில் இருப்பதாக  Pierre Poilievre கூறினார்.

அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon, Liberal அரசாங்கத்தின் சார்பாக Bernard Généreux விரைவில் நலன்பெற வாழ்த்துத் தெரிவித்தார்.

Côte-du-Sud-Rivière-du-Loup-Kataskomiq-Témiscouata தொகுதிக்காக நாடாளுமன்ற உறுப்பினரான Bernard Généreux முதன்முதலில் 2009 இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 தேர்தலில் தோல்வி அடைந்த அவர் 2015 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார்.

அதன் பின்னர் மூன்று முறை அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related posts

இரண்டு இடைத்தேர்தலில்  Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan

வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை: Donald Trump

Lankathas Pathmanathan

ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment