தேசியம்
செய்திகள்

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Tokyo ஒலிம்பிக்கில் கனேடிய  பெண்கள் கால்பந்து அணி  தங்கம் வென்றது.
வெள்ளிக்கிழமை காலை, கனேடிய பெண்கள் 3-2 என்ற goal  கணக்கில் சுவீடன் அணியை  வெற்றி கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றனர்.

கனேடிய பெண்கள் கால்பந்து அணி 2012, 2016 ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை கனடா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வெற்றிபெற்றது.
5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் Moh Ahmed வெள்ளிப் பதக்கத்தை கனடாவுக்காக வெற்றி பெற்றார்.

இது ஆண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கனடாவின் முதலாவது பதக்கமாகும்,

அதேவேளை கனடாவின் ஆண்கள் relay  அணி வெண்கலம் வென்றது.

இந்த போட்டியில் கனடாவின் இரண்டாவது தொடர்ச்சியான ஒலிம்பிக் வெண்கலம் இதுவாகும்.
Tokyo ஒலிம்பிக்கில் இதுவரை கனடா 6 தங்கம், 6  வெள்ளி, 10  வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

கனேடிய தூதரின் வெளியேற்றம் ஒரு பழிவாங்கல்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Team கனடாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா கூறுகிறது

கனடாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!