கனடாவில் இதுவரை 42 மில்லியன் பேர் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்.
இதுவரை கனடாவுக்கு 55 மில்லியன் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளதாகவும், அவற்றில் 50 மில்லியன் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும், பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த் உறுதிப்படுத்தினார்.
கனடாவில் 68 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ளனர். அவர்களுள் 42 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.