தேசியம்
செய்திகள்

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனடியர்கள் பலி: கனடிய வெளிவிவகார அமைச்சு!

Florida தொடர்மாடி கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இரண்டாவது கனேடியரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

இரண்டு கனேடியர்களின் சடலங்கள் அந்த இடத்தில் காணப்பட்டன என்பதை உறுதிப்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. குறைந்தது மேலும் இரண்டு கனேடியர்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.

தனியுரிமைச் சட்டம் காரணமாக, இறந்த கனேடியர்கள் குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை.

ஆனாலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் 68 வயதான Tzvi Ainsworth, அவரது மனைவி 66 வயதான Ingrid Ainsworth என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், இந்தத் தொடர் மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு கனேடியர்கள் காணாமல் போனதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

Related posts

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறிய கனேடிய tennis வீராங்கனை!

Gaya Raja

இந்தியா- கனடா உயர்மட்ட தூதர்கள் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment