தேசியம்
செய்திகள்

FIFA தொடருக்கு கனடாவுக்கு $1 பில்லியன் பொது நிதி செலவு?

FIFA உலகக் கோப்பைக்கு கனடாவுக்கு 1 பில்லியன் டொலருக்கு அதிகமான பொது நிதி செலவாகும் என் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வரவு செலவு கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை ஒன்றின் படி, 2026 FIFA ஆண்கள் உலகக் கோப்பைக்காக கனடா 1 பில்லியன் டொலருக்கு அதிகமாகச் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டத்திற்கான உத்தேச செலவு 82 மில்லியன்டொலர்கள் என நாடாளுமன்ற நிதிநிலை அதிகாரி கணித்துள்ளார்.

இந்தத் தொகை, உலகக் கோப்பை நிகழ்வுகளுக்கான கடந்தகால செலவினங்களுடன் ஒத்துப்போகிறது என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, Mexico நாடுகளுடன் இணைந்து இம்முறை FIFA உலகக் கோப்பைக்கு தொடர் ஆட்டங்கள் நடைபெறும் மூன்று நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.

கனடாவில் Junw 11 முதல் July 19 வரை நடைபெறும் போட்டிகள், Toronto Vancouver ஆகிய நகரங்களில் நடத்தப்படுகின்றன.

இதில் ஏழு ஆட்டங்கள் Vancouver நகரிலும், ஆறு ஆட்டங்கள் Toronto நகரிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்த 13 ஆட்டங்களின் மொத்த செலவு சுமார் 1.07 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 473 மில்லியன் டொலர் மத்திய அரசாங்கத்திடமிருந்து, மீதமுள்ள தொகை ஏனைய மட்ட  அரசாங்கங்களில் இருந்தும் வரவுள்ளன.

April மாத நிலவரப்படி, Toronto நகரம் 380 மில்லியன் டொலர் செலவிடத் திட்டமிட்டிருந்தது.

இதில் தற்போது உள்ள மத்திய அரசின் மானியங்களும் அடங்குகிறது.

British Colombia 578 மில்லியன் டொலர் செலவழிக்கத் திட்டமிட்டது.

Related posts

Influenza A தொடர்பான 3 குழந்தை மரணங்கள் கிழக்கு Ontario-வில் பதிவு

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாண தேர்தலில் Progressive Conservative வெற்றி

Lankathas Pathmanathan

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

Gaya Raja

Leave a Comment