September 29, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் பல பகுதிகளில் குளிர் கால வானிலையின் தாக்கம்

கடுமையான குளிர் கால வானிலையின் தாக்கம் இந்த வாரம் கனடாவின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெரும் சவால்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.

Newfoundland and Labrador, தெற்கு Ontario, தெற்கு Quebec , Northwest Territories, Nunavut, Yukonனின் சில பகுதிகள் குறிப்பிடத்தக்க மழை அல்லது பனியால் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கிறது.

British Colombia, New Brunswick போன்ற மாகாணங்கள் கடுமையான குளிர் காலநிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

உறைபனி மழை, பனி, பலத்த காற்று என கடுமையான வானிலை வியாழக்கிழமை (15) மில்லியன் கணக்கான கனடியர்களைப் பாதிக்கிறது.

இதன் காரணமாக கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆபத்தான போக்குவரத்து நிலைமைகள் தொடர்கிறது.

தெற்கு Saskatchewan, Manitoba பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு புதன்கிழமை (14) ஏற்பட்டது.

வியாழக்கிழமை Ontarioவில் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது.

இந்த பனிப்புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நான்கு மாகாணங்களும் சுற்றுச்சூழல் கனடாவின் சிறப்பு வானிலை அறிக்கையின் கீழ் தொடர்ந்து உள்ளன.

வெள்ளிக்கிழமை (16) இந்த பனிப்பொழிவு தெற்கு Quebecகை தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தொடர்ந்து வார விடுமுறையில் Atlantic கனடாவை இந்த பனிப்புயல் தாக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

Paris Paralympics: முதலாவது நாள் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தை தாக்கும் மற்றொரு பனிப்புயல்

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாட எதிர்பார்த்திருக்கும் கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan

Leave a Comment