September 29, 2026
தேசியம்
செய்திகள்

Labrador விமான விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Labrador விமான நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் பலியானார்.

புதன்கிழமை (14) சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் உயிரிழந்தார்

காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் புதன்கிழமை பிற்பகல் மரணமடைந்ததாக RCMP உறுதிப்படுத்தியது.

இந்த விமானத்தில் இருந்த 45 வயதான சுவிஸ் பெண், St. John மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் தொடர்ந்தும் உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதாக RCMP வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தது.

இந்த விமான விபத்து கனடிய ஆயுதப்படை தளத்தின் ஒரு பகுதியில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.

Related posts

Toronto துணை நகர முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Lankathas Pathmanathan

பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் மாகாண முதல்வர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment