இந்த வாரம் நடைபெறும் Toronto நகர சபை கூட்டத்தில் நகரசபை உறுப்பினருக்கு எதிரான OPP விசாரணை முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Toronto நகரசபை உறுப்பினரும் தமிழருமான பார்த்தி கந்தவேள் Ontario மாகாண காவல்துறையினர் விசாரணையை எதிர் கொள்கிறார்.
இந்த விசாரணை குறித்த செய்தி வெளியானதன் பின்னரான முதலாவது நகரசபை கூட்டம் புதன்கிழமை (20) நடைபெறவுள்ளது.
தான் OPP விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாக கடந்த வாரம் பார்த்தி கந்தவேள் தெரிவித்திருந்தார்.
பார்த்தி கந்தவேள் கட்டிட மேம்பாட்டாளர்களிடமிருந்து பணம் கோரியதாக குற்றச்சாடுகளை பிரதான ஊடகங்கள் முன்வைத்துள்ளன.
இந்தச் செய்தி வெளியான நாள் முதல், இந்த சம்பவம் குறித்த பேச்சுகள் தொடர்கிறது.
பொது நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டாலும், OPP விசாரணை குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் அவரினால் May 11 பகிரப்பட்ட அறிக்கைக்கு அவரது அலுவலகம் பரிந்துரைத்து வருகிறது.
திங்கட்கிழமை (18) நடைபெற்ற தமிழின படுகொலை நினைவு தினம் உட்பட குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டார்.
OPP விசாரணை குறித்த அறிவித்தலின் பின்னர் பார்த்தி கந்தவேள் நகரசபைக்கு திரும்பும் முதல் நிகழ்வாக புதன்கிழமை நடைபெறும் நகரசபை கூட்டம் அமைகிறது.
இந்த வார நகர சபை அமர்வின் போது அவர் கையாளவேண்டிய சில விடங்கள நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
ஆனாலும் பார்த்தி கந்தவேள் காணொளி வாயிலாக சபை அமர்வுகளில் இணைந்து கொள்வதன் மூலம் ஊடகங்களின் கேள்விகளை முற்றாக தவிர்க்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
Scarborough Southwest (தொகுதி 20) நகரசபை உறுப்பினரான பார்த்தி கந்தவேள் 2023 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
நகரசபை உறுப்பினராவதற்கு முன்னதாக அவர் 2014 முதல் 2022 வரை இரண்டு முறை TDSB அறங்காவலராக பணியாற்றினார்.
October 26 அன்று நடைபெறவிருக்கும் 2026-ஆம் ஆண்டு நகர சபைத் தேர்தலுக்கு முன்னதாக, வேட்பாளர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு ஆரம்பித்த ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த விசாரணை குறித்த செய்தி வெளியானது.
இந்த விசாரணை நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பார்த்தி கந்தவேளின் திட்டங்களைப் பாதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை (19) வரை பார்த்தி கந்தவேள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தனது பெயரை பதிவு செய்யவில்லை.
அவரது Scarborough Southwest தொகுதியில் போட்டியிட இதுவரை மூன்று வேட்பாளர்கள் பெயர் பதிவு செய்துள்ளனர்.
பார்த்தி கந்தவேளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை..
