September 30, 2026
தேசியம்
செய்திகள்

புதிய graphite சுரங்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

G7 நாடுகளின் மிகப்பெரிய graphite சுரங்கம் எனக் கூறப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (19) பங்கேற்றார்.

G7 நாடுகளில் மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த புதிய Quebec graphite சுரங்கம் கனடாவை மேலும் வலிமையாக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்தச் சுரங்கம் கனடிய பொருளாதாரத்தில் $2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதுடன், 1,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டு தொறும் 106,000 டன்களுக்கும் அதிகமான இயற்கை  graphite உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது கனடாவின் தற்போதைய மொத்த உற்பத்தியை விட எட்டு மடங்கு – அதிகமானது என பிரதமர் கூறினார்.

Related posts

முதற்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா.பிரகடனத்துடன் கனேடிய சட்டத்தை இணைக்கும் மசோதா நிறைவேறியது

Gaya Raja

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

November 21 தமிழீழத் தேசியக் கொடி நாள்: அங்கீகரித்தது Brampton

Lankathas Pathmanathan

Leave a Comment